கவினின் நடிப்பில் உருவாகி இருக்கும் டாடா திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பு அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடைசியாக வெளிவந்த லிப்ட் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதனாலேயே இந்த டாடா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். அப்பா, மகன் இடையே இருக்கும் பாச பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த பலரும் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை பற்றி இங்கு காண்போம்.
Also read: ஹாலிவுட் பட கதையில் உருவாகும் கவினின் டாடா பட போஸ்டர்.. கைப்பிடித்து தூக்கிவிடும் பா.ரஞ்சித்
படத்தின் முதல் பாதி சென்டிமென்ட் கலந்த கலவையாகவும் இரண்டாம் பாதி அழுத்தமான கதையாகவும் இருக்கிறது. மேலும் கவினின் நடிப்பு முந்தைய படங்களை காட்டிலும் இன்னும் கூடி இருக்கிறது. அறிமுக இயக்குனராக இருந்தாலும் சரியான விதத்தில் படத்தை கொண்டு சென்றிருக்கும் இயக்குனருக்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் எதார்த்தமாக நகரும் திரைக்கதையும், கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் ஆரம்பத்தில் பொறுப்பில்லாமல் திரியும் கவின் குழந்தை பிறந்த பிறகு பொறுப்பான அப்பாவாக மாறுவதும் சிறப்பு. அதிலும் வைராக்கியத்தோடு குழந்தையை வளர்ப்பது என அவர் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

Also read: உலகத்துல பாதி பிரச்சனை உன்ன பெத்தவனால தான்.. கவின் நடிப்பில் வைரலாகும் DADA டீசர்
மேலும் ஹீரோயின் அபர்ணாதாஸ் இதற்கு முன்பு பீஸ்ட் படத்தில் நடித்திருந்தாலும் இதில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் கடந்த வருடத்தில் வெளியான லவ் டுடே எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதேபோன்று இப்படமும் இருக்கும் என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கவின் இப்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பிரிவியூ ஷோவை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இது படத்தின் வசூலையும் உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
