செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மின்றதெல்லாம் தங்கம் இல்ல.. தீபாவளி போனஸாக வெளியான கவின் நெல்சன் கூட்டணியின் ப்ளடி பெக்கர் ட்ரெய்லர்

Bloody Beggar Trailer: இயக்குனராக இருந்த நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சிவபாலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளடி பெக்கர் டைட்டில் அறிவிப்பின் போதே மிகப்பெரும் அளவில் கவனம் பெற்றது.

அசல் பிச்சைக்காரர் தோற்றத்தில் இருந்த கவின் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதன் ஆரம்பத்திலேயே கவின் பிச்சைக்காரராக நடித்து மக்களை ஏமாற்றுகிறார்.

வேலைக்கு செல்வது போல் தினமும் காலையில் முகத்தில் அழுக்கு மேக்கப் போட்டு பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறுகிறார். இப்படி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் அவர் ஒரு அரண்மனையில் துரதர்ஷ்ட வசமாக மாட்டிக் கொள்கிறார்.

கவின் நெல்சன் கூட்டணியின் ப்ளடி பெக்கர்

அங்கே இருக்கும் மனிதர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஓநாய் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட ராஜா போல் தவிக்கும் கவின் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்க வேண்டும். இது ட்ரைலரை பார்க்கும் போதே புரிகிறது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல் அரண்மனைக்குள் பல சைக்கோ கதாபாத்திரங்கள் இருக்கிறது. இதற்கு நடுவில் வழக்கமான டார்க் காமெடியை இணைத்து படத்தை எடுத்துள்ளனர். வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு போனஸ் ஆக அமைந்துள்ளது.

நிச்சயம் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என கவின் ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களில் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News