திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Kavin: வெற்றிமாறன் கூட்டணியில் புது படத்திற்கு அஸ்திவாரத்தை போட்ட கவின்.. இதுக்கும் டைட்டில் இங்கிலீஷ் தானா

Kavin Upcoming Movie: பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகு கவினுக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான் என்று சொல்வதற்கு ஏற்ப புது புது படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் வெற்றி படத்தை கொடுத்து வசூல் அளவில் லாபத்தை ஈட்டி விடுகிறார். லிஃப்ட், டாடா மற்றும் சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் படம் அனைத்துமே வெற்றி வாகை சூடிவிட்டது.

இதனைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படத்திற்கான அஸ்திவாரத்தையும் போட்டுவிட்டார். அந்த வகையில் வெற்றி மாறன் தயாரிப்பில் கவின் களமிறங்கப் போகிறார்.

அடுத்த கட்ட லெவலுக்கு முன்னேறி போகும் கவின்

காக்கா முட்டை, விசாரணை, கொடி, வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி பிளாக் மெட்ராஸ் இணைந்து தயாரிக்கும் படமான மாஸ்க் படத்தில் கவின் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் தருமி என்ற குறும்படத்தை இயக்கி கோல்ட் மெடல் விருதை பெற்றிருக்கிறார்.

kavin vettrimaran (1)
kavin vettrimaran (1)

அத்துடன் வெற்றிமாறனின் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர்களுடன் கூட்டணியில் தான் கவின் அடுத்த கட்ட லெவலுக்கு போகப் போகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க போகிறார். ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது ஒரு படத்தை கொடுத்து மக்கள் மனதை வென்று விடுகிறார் கவின்.

அந்த வகையில் இப்படமும் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏன் கவின் வெள்ளைக்கார துரை போல எல்லா படத்திற்கும் இங்கிலீஷ்ல டைட்டிலை வைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

அந்த வகையில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் மாஸ்க் என்று இங்கிலீஷ் பெயர்தான் வைத்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று தொடர்ந்து ஹீரோவாக ஜொலித்துவரும் இவர் அடுத்த தலைமுறைகள் கொண்டாடும் அளவிற்கு இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News