புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பணத்தாசையில் வீணா போகும் கவின்.. ஒரு படம் ஹிட்டுக்கு இவ்வளவு ஹெட் வெயிட்டா?

Actor Kavin : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், கவின், ரியோ போன்ற பல நடிகர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் ஹிட்டுக்கு கவின் ஓவர் அலப்பறை கொடுப்பதாக விமர்சனங்கள் எழுகிறது.

அதாவது கடந்த வருடம் கவினுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தான் டாடா. இந்த படம் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வசூலில் சக்கை போடு போட்டது. அதன் பிறகு லிப்ட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் இப்போது வரை கவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருக்கிறது.

இதற்கு காரணம் அவருடைய பணத்தாசை தான் என்று கூறப்படுகிறது. கவினை தேடி நிறைய இயக்குனர்கள் வந்தாலும் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு மலைத்துப் போய் ஓடிவிடுகிறார்களாம். அதாவது சுந்தர் சி கலகலப்பு 3 படத்தை எடுக்க உள்ள நிலையில் கவினை நாடி இருக்கிறார்.

Also Read : நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

கவினும் அதற்கு ஓகே சொன்ன நிலையில் 6 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். ஆனால் இவ்வளவுக்கு வொர்த் இல்லை என்று சொல்லிவிட்டு சுந்தர் சி கிளம்பி விட்டாராம். இதைத் தொடர்ந்து வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தயாரிப்பில் ஒரு நல்ல கதையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த கதையில் கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று வெற்றிமாறன் பேசியிருக்கிறார். ஆனால் கவின் 5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதால் இந்த பட வாய்ப்பு போய்விட்டதாம். ஒரு படத்தின் ஹிட்டால் இவ்வாறு அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி கேட்பதால் நல்ல படத்தின் வாய்ப்புகளும் கவினை விட்டு நழுவி வருகிறது.

Also Read : தரமான இயக்குனருடன் கை கோர்க்க போகும் குட்டி சிவகார்த்திகேயன்.. #கவின்07-ல் ஹீரோயின் நயன்தாராவா!

Trending News