சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிக் பாஸ் கவினுடன் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்.. லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின் . இந்த சீரியலின் மூலம் கவின் புகழின் உச்சத்திற்கு சென்றார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு நடிகராக பரிச்சயமானவர்.

இந்த தொடர் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற கவின் முதல் வாரத்திலிருந்து ரசிகர்கள் கவின் தான் வெற்றி பெறுவார் என எதிர் பார்த்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவர் ஒரு சில சேட்டைகள் செய்ய சிறிது நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

கவின் நடிப்பில் ஹீரோவாக வெளியான நட்புனா என்ன தெரியுமா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதனால் ரசிகர்கள் இவர் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்த்திருந்தனர்.

pavithra lakshmi
pavithra lakshmi

தற்போது கவின் லிப்ட் எனும் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி மூலம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமான பவித்ராவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பவித்ரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பவித்ராவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Trending News