புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தரமான இயக்குனருடன் கை கோர்க்க போகும் குட்டி சிவகார்த்திகேயன்.. #கவின்07-ல் ஹீரோயின் நயன்தாராவா!

#Kavin07: அட நம்ம கவினுக்கு உடம்பெல்லாம் மச்சம், அதான் இப்படி எல்லாம் அமையுதுனு ஒரு கூட்டமும், பொண்டாட்டி வந்த ராசி பட வாய்ப்பு கொட்டுதுனு ஒரு கூட்டமும் கவினை பற்றி பேசுகிறார்கள். உண்மையில் கவின் பட்ட கஷ்டங்கள் ரொம்பவே அதிகம். அவருடைய கடின உழைப்பு மற்றும் சினிமா மீதான தீராத காதல் தான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து இருக்கிறது. கவினின் கடினமான வாழ்க்கை பாதை பிக்பாஸ் 3 பார்த்தவர்களுக்கு நன்றாக புரியும்.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் கவின் நடித்த வேட்டையன் கேரக்டர் அவரை தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கொண்டு போய் சேர்த்தது. அந்த கேரக்டர் கொடுத்த வரவேற்பினால் அவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அந்த படம் சரியான நேரத்தில் முடிக்கப்படாததால் கவின் பல வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைமை அமைந்து விட்டது. உண்மையை சொல்ல போனால் அந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் கவின் யாரென்று மக்களுக்கு மறந்து விட்டது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு ஒரு மறுபிறப்பாக தான் அமைந்தது. கவின் மட்டும் பண பெட்டியை எடுக்காமல் இருந்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னராக ஆகியிருப்பார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் கவின் நடித்த லிப்ட் படம் அவரை ஒரு நம்பிக்கை நாயகனாக தயாரிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்தது.

Also Read:சினிமாவுக்கு முன் வேறு தொழில் பார்த்த 5 பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டார் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை

தொடர்ந்து கவின் நடித்த டாடா படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, அவரை முன்னணி ஹீரோக்களின் வரிசையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இதற்கிடையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது கிஸ் மற்றும் ஸ்டார் படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் ஸ்டார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

கவின்07 பட அப்டேட்

தற்போது நடிகர் கவினின் ஏழாவது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இந்த அப்டேட்டால் கவினின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான். கவின் தன்னுடைய ஏழாவது படத்தில் ஹிட் பட இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைகிறார் .

நடிகர் கவினின் ஏழாவது படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் கிராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனர் ஆக இருந்த விக்ரமன் அசோகன் இயக்குகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் கவினுடன் ஜோடி சேர இருப்பதாக தெரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து விஜய் டிவியிலிருந்து வந்த கவின் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

Also Read:வெற்றி துரைசாமி ஹிமாச்சலுக்கு சென்றது இதுக்கு தான்.. வலியோடு காரணத்தைச் சொன்ன வெற்றி மாறன்

 

 

Trending News