Diwali Release Movies: இனி அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் கலை கட்ட ஆரம்பித்து விடும். இந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய், வெங்கட் பிரபு கூட்டணியின் கோட் வெளியாகிறது. அதை அடுத்து ஆயுத பூஜையை குறி வைத்து தலைவரின் வேட்டையன் வருகிறது.
அதைத்தொடர்ந்து தீபாவளியும் அக்டோபர் மாத இறுதியில் வருகிறது. அந்த நாளை குறிவைத்து சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
அதற்கு போட்டியாக மேலும் 2 படங்கள் இந்த களத்தில் குதித்துள்ளது. அதன்படி ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் தீபாவளியை முன்னிட்டு வெளி வருகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் புகழ் ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
காமெடி ரொமான்ஸ் கலந்து உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் ஜெயம் ரவிக்கு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ப்ளடி பெக்கர் படமும் இந்த ரேஸில் இணைந்துள்ளது.
சிவகார்த்திகேயனோடு மோதும் கவின்
கலகலப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தில் கவினின் தோற்றமே ஆச்சரியப்படுத்தி இருந்தது. இதுவே ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இவர் களம் இறங்குவதும் மீடியாக்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.
விஜய் டிவியிலிருந்து ஹீரோவாக முன்னேறி வரும் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவர் அதை உறுதியாக மறுத்து வந்தார். இந்த சூழலில் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோத இருப்பது அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
இதனால் இந்த தீபாவளி சரவெடி பட்டாசாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது வரை அக்டோபர் 31ஆம் தேதி மூன்று படங்கள் மட்டுமே வெளியாக இருக்கும் அறிவிப்பு வந்துள்ளது. இதில் விடாமுயற்சி இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்கள்
- செப்டம்பர் மாதம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 12 படங்கள்
- சிவகார்த்திகேயன் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்
- காசுக்காக கண்ணியத்தை கெடுத்த சிவகார்த்திகேயன்