வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரிலீசுக்கு முன்பே கோடிகளில் வியாபாரமான பிளடி பெக்கர்.. மவுசு கூடிய கவின், நெல்சன் கூட்டணி

Kavin: விஜய் டிவியிலிருந்து வந்த நெல்சன் அடுத்தடுத்த படங்களின் மூலம் சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவுக்கு வளர்ந்தார். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் 650 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

அதை அடுத்து எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த நெல்சன் ஜெயலர் 2 ஸ்கிரிப்டில் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் லோகேஷ் போல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

அந்த வகையில் இவருடைய தயாரிப்பில் நாயகனாக கவின் நடிக்க இருக்கும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இவரும் சிவகார்த்திகேயன் போல் விஜய் டிவியில் இருந்து வந்து ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ளார்.

ரிலீசுக்கு தயாரான பிளடி பெக்கர்

லிப்ட், டாடா வரிசையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படமும் இவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தது. 12 கோடியில் எடுக்கப்பட்ட அப்படம் 20 கோடி வரை வசூல் லாபம் பார்த்தது. அதை அடுத்து இப்போது கவின் கைவசம் கிஸ், மாஸ்க் உள்ளிட்ட படங்கள் இருக்கிறது.

மேலும் நெல்சன் கூட்டணியில் அவர் நடித்து வரும் ப்ளடி பெக்கர் செப்டம்பர் மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அதன் தியேட்டர் உரிமம் 10 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இந்த உரிமையை பெற்றுள்ளது. இது தவிர சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் அந்த வியாபாரம் முடியவில்லை.

இருப்பினும் நெல்சன் கவின் கூட்டணிக்கு இப்போது மவுசு இருக்கிறது. ஏற்கனவே இவர்களுடைய படம் பற்றிய ப்ரோமோ வீடியோ வேற லெவலில் ஆர்வத்தை உருவாக்கி இருந்தது. அதனாலேயே இப்போது இப்படத்தின் வியாபாரமும் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளரான நெல்சனுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

எதிர்பார்ப்பை உருவாக்கிய நெல்சன் கவின் கூட்டணி

Trending News