வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

டாப்ல இருக்கும் நம்பர் நடிகைக்கு ஹீரோவாகும் கவின்.. Sk, விஜய் மாதிரின்னு சொன்னதுக்கு ஜெட் வேகத்துல போகும் டாடா

Kavin New Movie Update: நேரம் காலம் கூடிவிட்டால் எல்லாமே நல்லதாகத் தான் நடக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கவினுக்கு ஒவ்வொரு படத்திலும் ஏறுமுகமாக வெற்றி கிடைத்து வருகிறது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவினை நம்பி போனால் அந்த படம் நஷ்டம் அடையாது என்று சொல்லும் அளவிற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டார். இதற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் காரணமாக இருந்தாலும் கவினின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது.

கவினுக்கு தொடர்ந்து குவிந்து வரும் வாய்ப்புகள்

அதனால் தான் நடித்த மூன்று நான்கு படத்திலேயே ஏக போகமாக வளர்ந்து வந்துவிட்டார். லிப்ட், டாடா, ஸ்டார் படத்தை தொடர்ந்து சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் படத்திலும், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் படத்திலும் கமிட் ஆகிவிட்டார். இப்படத்தை தருமி என்னும் குறும்படத்தை இயக்கி கோல்ட் மெடல் வாங்கிய விக்ரமன் அசோக் இயக்குகிறார்.

இப்படத்தை தொடர்ந்து கவினின் எட்டாவது படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார். லோகேஷ் கனகராஜின் உதவியாளராக இருக்கும் விஷ்ணு எடவன் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கப் போகும் படத்தில் கவின் கமிட் ஆகிவிட்டார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார்.

அந்த வகையில் இந்த கூட்டணியில் கவினுக்கு ஜோடியாக இணையப் போவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு 39 வயதும், கவினுக்கு 33 வயதும் இருக்கும் நிலையில் இது சம்பந்தமான கதையை எடுக்கப் போகிறார்கள். அதாவது வயது வித்தியாசமாக காதலித்து கல்யாணம் பண்ணியதால் அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் மையமாக வைத்து கதை வித்தியாசமான கோணத்தில் எடுக்கப் போகிறார்கள்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின்டனும் சேர்ந்து புது படத்திற்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார். இவர்கள் கூட்டணி நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவார்கள்.

நிற்காமல் ஓடிவரும் கவின்

Trending News