கவினை பாராட்டிய விஜய்…. எதற்காக தெரியுமா..?

kavin vijay
kavin vijay

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து பிரபலமானவர் தான் கவின். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

முன்னதாக நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான கவின், தற்போது லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டது. தற்போது உள்ள ஊரடங்கால் தியேட்டர் திறக்கவில்லை என்றால், ஓடிடியில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் பீஸ்ட் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இது குறித்து பேசிய கவின், “சூட்டிங் துவங்கியதில் இருந்து விஜய் செட்டில் இருப்பவர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக உணர செய்து வருகிறார். நெல்சன் திலீப்குமாருடனான இந்த பயணம் சிறப்பாக உள்ளது. மேலும் தான் நடித்திருந்த அஸ்கு மாரோ பாடல் குறித்து நடிகர் விஜய் தனக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.

kavin
kavin

முன்னதாக கவின் மற்றும் தேஜூ அஸ்வினி நடிப்பில் தரன்குமார் இசையில் உருவாகிய இருந்த அஸ்கு மாரோ ஆல்பம் சாங் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பையும், அதிக பார்வையாளர்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner