புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Kavin : கதையில் வித்தியாசத்தை காட்டும் கவின்.. லிஃப்ட் முதல் பிளடி பெக்கர் வரை இதை கவனிச்சீங்களா?

கவின் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அந்த வகையில் வருகின்ற மே பத்தாம் தேதி கவினிரன் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் கவின் படங்களை தொடர்ந்து கவனித்து வந்தால் சில ஒற்றுமை இருக்கிறது. 

அதாவது ஒவ்வொரு படத்திற்கும் கதையில் வித்தியாசம் காட்டும் கவின் டைட்டிலை ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார். அந்த வகையில் லிப்ட் படம் ஹாரர் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் ஒரு அளவு நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக கவின் தேர்ந்தெடுத்து நடித்த படம் தான் டாடா. ரொமான்டிக் கதையாக எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து இப்போது ஸ்டார் படம் உருவாகி இருக்கிறது. சினிமா ஆசையில் இருக்கும் கவினின் உணர்ச்சி பூர்வமாக கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில டைட்டிலை பயன்படுத்தும் கவின்

இந்த படம் முழுக்க முழுக்க எமோஷனல் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக கவின் கிஸ் என்ற ஆங்கில டைட்டிலில் உருவான மற்றொரு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு பிளேபாய் கேரக்டரில் தான் கவின் நடித்திருக்கிறார். 

அடுத்ததாக நெல்சனின் தயாரிப்பில் கவின் நடிக்க உள்ள படம் தான் பிளடி பெக்கர். பொதுவாக நெல்சனின் டார்க் காமெடி சாயலில் தான் இந்த படமும் உருவாக இருக்கிறது. இவ்வாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்கி வருகிறார் கவின்.

அவரைப் பற்றி நிறைய தவறான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த படியை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஸ்டார் படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுக்கும் என தெரிகிறது.

Trending News