புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Kavin: கவினின் ஸ்டார் படம் சூர மொக்கையா?. பெய்டு மாஃபியாவால் கெத்து காட்டும் ஹீரோக்கள்

Kavin: நடிகர் கவின் நடித்த ஸ்டார் படம் இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்துக்கு சமூக வலைத்தளம் முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்து கிடக்கின்றன. லிஃப்ட், டாடா படங்களை தொடர்ந்து கவின் மூன்றாவது வெற்றி படத்தை கொடுத்து விட்டார் என்று அவருடைய ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

கவின் ரசிகர்களை தாண்டி ஜெனரஞ்சகமான ரசிகர்களுக்கு ஸ்டார் படம் திருப்தியை கொடுத்ததா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. ஒரு ஹீரோவுக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை வேண்டும் என்று கிளப்புவதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கும்.

அதை எல்லாம் தாண்டி எப்படித்தான் இருக்கிறது இந்த ஸ்டார் படம். கவின் இதற்கு முன்பு நடித்த லிஃப்ட், டாடா படங்களை ஒப்பிடுகையில் ஸ்டார் படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. ஒரு சாமானிய மனிதன் சினிமாவில் எப்படி ஹீரோவாக மாறுகிறான் என்பதுதான் கதை.

தாவணிக் கனவுகளில் இருந்து இதுபோன்ற நிறைய கதைகளை நாம் பார்த்து விட்டோம். அதை தாண்டி ஸ்டார் படத்தில் என்ன புதுசா இருக்குது என்று பார்த்தால் எதுவுமே இல்லை.

சம்பந்தமில்லாமல் ரெண்டு காதல், கல்யாணம் தேவையில்லாத காட்சிகள் என படத்தை ரெண்டு மணி நேரம் ஓட்டுவதற்காக வீடியோக்களை எடுத்து சேர்த்தது போல் தான் இருக்கிறது. ஸ்டார் படத்தை ஒரு குறும்படமாகவே எடுத்து முடித்திருக்கலாம்.

அதில் தேவையில்லாத காட்சிகளை செருகி பெரிய படம் போல் காட்டி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனா இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக இருக்கிறது என்று தோன்றலாம்.

பெய்டு மாஃபியாவால் கெத்து காட்டும் ஹீரோக்கள்

‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ இந்த வார்த்தைக்கு அர்த்தம் டெக்னாலஜி வளர்ந்த நாளிலிருந்து எல்லோருக்கும் மறந்து விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட் போன், போனில் டேட்டா இருந்தால் போதும் கவிஞனிலிருந்து சினிமா விமர்சகர் வரை ஆகிவிடலாம்.

தங்களுக்கு பிடிக்காத ஹீரோக்களின் படங்களை நன்றாக இருந்தாலும் நெகடிவ் ஆக எழுதி கொளுத்திப்போட்டு தோற்கடிக்கவும் செய்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் தங்களுக்கு பிடித்த ஹீரோ மொக்கை படம் நடித்தாலும் அது பற்றி பெரிய அளவில் பேசி ஜனங்களை தியேட்டருக்கு வரவழைத்து விடுகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட நபரிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுக்கும் கும்பலும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே இந்த பெய்டு மாஃபியா தலை விரித்து ஆடுகிறது.

இதனால் ஜெயிக்க வேண்டிய படங்கள் தோற்றுப் போகின்றன. கண்டுகொள்ள கூடாத படங்கள் எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்றன. படம் பிடிக்கும் பிடிக்காது என்பது ரசிகர்களின் பார்வையை பொறுத்தது.

ஸ்டார் படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என ஜனரஞ்சக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News