ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கவினின் கேரியரை தூக்கிவிட்ட டாடா.. மூன்றே நாளில் இவ்வளவு வசூலா?

சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கவின் அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை கெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் மூலம் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. ஆனால் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எதுவும் போகவில்லை.

கடைசியாக வெளியான லிப்ட் படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டாடா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். ஒரு இளம் காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே எல்லை மீறி நடக்கிறார்கள். அதனால் கதாநாயகி கர்ப்பமாகி விடுகிறார்.

Also Read : எதிர்பாராத ஓபனிங் கொடுத்த கவின்.. முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பிய டாடா

ஆனால் அவர்களது வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் இந்த இளம் ஜோடி தனியாக வாழ்ந்து வருகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு காதல் ஜோடிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட குழந்தையை தந்தை இடம் கொடுத்துவிட்டு தனது குடும்பத்துடன் செல்கிறார் கதாநாயகி.

அதன் பின்பு தனி ஆளாக கவின் அந்த குழந்தையை வளர்க்கிறார். முதல் நாளே இப்படம் கிட்டத்தட்ட இரண்டு கோடி வசூல் செய்து கவினுக்கு சிறந்த ஓபனிங் கொடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Also Read : ல்யாணம் ஆகாமலே அப்பாவான கவின்.. அனல் பறக்க வெளிவந்த டாடா பட திரைவிமர்சனம்

அதாவது கிட்டத்தட்ட மூன்றே நாள் முடிவில் கவினின் டாடா படம் கிட்டத்தட்ட 5 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாம். கவினுக்கு இப்படி ஒரு மாபெரும் வெற்றியை எந்த படமும் இதுவரை கொடுத்ததில்லை. மேலும் படத்தில் கவினின் நடிப்பு அபாரம் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

டாடா படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்போது கவினை அடுத்த படத்தில் புக் செய்ய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் பேர் ஆதரவு கொடுத்து வருவதால் இன்னும் சில நாட்களில் பல கோடிகளை டாடா படம் குவிக்க இருக்கிறது.

Also Read : டாடா, லியோ என கலக்கும் இரட்டை குழந்தைகளின் புகைப்படம்.. வாரிசுகளை களம் இறக்கிய பிரபல காமெடியன்

Trending News