Kavin: ஏற்கனவே சிவாஜியின் பராசக்தி பட டைட்டிலை வைத்ததற்காக சிவகார்த்திகேயன் சிக்கிக் கொண்டார். இதைத்தொடர்ந்து எம் ஆர் ராதாவின் மாஸ்கை கவின் போட்டிருப்பது போல் வெளியான மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
நடிகவேள் எம் ஆர் ராதாவின் மாஸ்க் அணிந்து கொண்டு கவின் இருப்பது போல் இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
கவினுக்காக இல்ல, வெற்றி மாறனுக்காக தான்
இது குறித்து நடிகர் ராதாரவி தன்னுடைய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் முன் அனுமதி வாங்கிவிட்டு முழு சம்மதத்துடன் தங்களுடைய படங்களில் கொண்டு வரும்போது எந்த பிரச்சனையும் வராது. எங்க அப்பா முகத்தை மாஸ்க் மாதிரி பயன்படுத்தி இருக்காங்க.
இது குறித்து வெற்றிமாறன் முன்னமே என்னிடம் தெரிவித்துவிட்டார். என்னுடைய முழு சம்மதத்துடன் தான் அந்த மாஸ்கை பயன்படுத்தினார்கள்.
வெற்றிமாறன் எப்போதுமே வித்தியாசமான ஆள். அவருடைய சிந்தனைகள் எப்போதுமே ஆச்சரியம் மிகுந்ததாக இருக்கும்.
அவர் அப்பாவின் மாஸ்கை பயன்படுத்துகிறார் என்றால் அதன் பின்னால் கண்டிப்பாக பெரிய காரணம் ஏதாவது இருக்கும் என்று பேசி இருக்கிறார்.
கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கும் மாஸ்க் படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவிய குணம் விக்ரமன் அசோக் இயக்க, வெற்றிமாறன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.