திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒன்னு ரெண்டு படங்கள் ஹிட்டானதால் மெதப்பில் சுற்றும் கவின்.. இப்படியே போனா தூங்கு மூஞ்சி கெதி தான்

Kavin: ஒருவருக்கு நேரம் காலம் கூடிவிட்டால் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்பதற்கு உதாரணமாக கவின் இருக்கிறார். சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்கள், சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும், ஹீரோக்களின் நண்பராகவும் நடித்து வந்தவர். பிக் பாஸ் போய்ட்டு வந்த பிறகு எல்லாமே இனி ஏறு முகம் தான் என்பதற்கு ஏற்ப இவருடைய கேரியரில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா போன்ற இரண்டு படங்களுமே ஹிட்டானது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்றுவிட்டார். அதனாலயே இவரை தேடி தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் கமிட் ஆகி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் இப்படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட கதையாகவும், வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி கவின் அடுத்தடுத்த படங்கள் மூலம் வெற்றி நடை போட்டு வரும் நேரத்தில் திருமண பந்தத்திற்கும் போய்விட்டார். சமீபத்தில் இவருடைய திருமணம் மோனிகா என்பவர் உடன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Also read: லீக்கானது ஜேசன் சஞ்சய்- கவின் படத்தின் ஸ்டோரி.. சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா.?

இதனைத் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் கவின் தற்போது படப்பிடிப்புக்கு லேட் ஆக வருவது, வந்த கொஞ்ச நேரத்திலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டும் என்று அவசரமாக பேக்கப் பண்ணிட்டு போகிறாராம். அது மட்டுமில்லாமல் படபிடிப்பு நேரத்தில் இயக்குனர் ஒரு சில மாற்றங்களை சொல்லும்போது கூட காது கொடுத்து கேட்காமல் இருக்கிறாராம்.

தற்போது இவரைப் பற்றி இந்த மாதிரி ஒரு விஷயம் வெளி வந்தால் கண்டிப்பாக இவருடைய கேரியரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பல வருடங்களாக கஷ்டப்பட்டு இப்பொழுது தான் ஒரு ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்று நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலைமையில் இந்த மாதிரியான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டால் இருக்கும் இடம் தெரியாமலே போய்விடுவார். இதே மாதிரி நிலைமையில் பல நடிகர்கள் சிக்கி காணாமல் போய் இருக்கிறார்கள்.

ஏன் அஸ்வின் கூட குக் வித் கோமாளி மூலம் மிகப் பிரபலமாகி பல பாடல்களில் ஃபேமஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்று வந்தார். போற போக்க பார்த்தா முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் இவருடைய அஜாக்கிரதியான பேச்சால் எல்லாத்தையும் சொதப்பிவிட்டார். தற்போது அஸ்வின் நிலைமை என்ன என்று கூட தெரியாத அளவிற்கு பரிதாபமாகிவிட்டார். இதையெல்லாம் மனதில் வைத்து கவின் கொஞ்சம் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் இவருடைய கேரக்டரில் உச்சத்தை தொட வாய்ப்பு இருக்கிறது.

Also read: கவின் போல் எலிமினேஷனை கச்சிதமாக கணிக்கும் போட்டியாளர்.. கருநாகமாக சுற்றி வரும் சைக்கோ

Trending News