புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Ghilli 2: கில்லி வசூலை பார்த்து பார்ட்- 2 வில் நடிக்க வலை விரித்த கவின்.. தளபதியோட ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Ghilli 2: ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்கள் புதிதாக போட்டி போட்டுக் கொண்டு முளைத்து வருகிறார்கள். அப்படி விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்தபடியாக வரக்கூடிய தலைமுறைகளில் எந்த ஹீரோக்கள் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் என கேள்விக்குறி தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது தீராத விளையாட்டுப் பிள்ளை நம்ம கவின் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய நிஜ கேரக்டராக பிளேபாயாக இருந்தாலும் ஆரோக்கியமான புரிதலுடன் அனைவரும் ரசிக்கும் படியாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அப்படிப்பட்ட இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் நஷ்டம் ஏற்படாத வகையில் லாபத்தை குவித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற வெள்ளிக்கிழமை கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளிவர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவரிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி விஜய்க்கு அடுத்தபடியாக அவருடைய இடத்திற்கு நீங்கள் வருவதாக பேச்சுக்கள் வருகிறது அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

கவின் போடும் தூண்டில்

அதற்கு கவின் ரொம்பவே அடக்கமாக அந்த மாதிரி எல்லாம் எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. ஒருவேளை ரசிகர்களுக்கு நான் அந்த மாதிரியான ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறேன் என்றால் அதுவே எனக்கு சந்தோஷம்தான் என்று கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து உங்களுக்கு விஜய் நடித்த படத்தை மறுபடியும் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு கவின், பெரும்பாலும் எந்த ஹீரோ நடித்த வெற்றி படங்களாக இருந்தாலும் அவர்களே இரண்டாம் பாகத்தில் நடித்தால் தான் பார்க்கும்படியாக இருக்கும். ஒருவேளை அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது என்றால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்படி கவின் கூறியதை பார்க்கும் பொழுது சமீபத்தில் வந்த கில்லி படத்தின் வசூலை பார்த்து தான் அதில் நடிக்க விரும்புவதாக தெரிகிறது.

அந்த வகையில் கவின் தற்போது அதற்கான அஸ்திவாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வருகிறார். இன்னும் கூடிய விரைவில் இதற்கான விஷயத்தில் இறங்கி விடுவார் போல. ஆனால் கவின் எடுத்த முடிவுக்கு தளபதி விஜய்யின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றால் ஏன் எல்லோரும் இப்படி கிளம்பி வரீங்க. நல்லா தானே போய்கிட்டு இருக்கு அப்படியே விட்ற கூடாது. உங்களுக்கான படத்தை வித்தியாசமாக கொடுக்கப் பாருங்களேன்னு சொல்வது போல் இருக்கும்.

அதே மாதிரி இந்த ஒரு விஷயம் தற்போது விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் கில்லி படம் என்றால் விஜய் மட்டும் தான். அவரிடம் இருக்கும் மாஸ் அந்த நடிப்பு வேறு யாரு நடித்தாலும் பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். ஒருவேளை விஜய் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க போவதால் அவருடைய இடத்தை எப்படியாவது பிடித்து விடலாம் என்று கவின் தூண்டில் போடுறார் போல.

அஜித்துக்கு ரஜினியின் பில்லா படம் போல் கவினுக்கு விஜய்யின் கில்லி படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News