புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Star Release: கவினின் ஸ்டார் படத்துக்கு வந்த சிக்கல்.. மாநாடு பட லாபத்தை எல்லாம் சரிக்கும் சந்தானம்

மே 10ஆம் தேதியை குறிவைத்து இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளது. அதில் ஒன்று கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் படம். இந்த படத்திற்கு 8 கோடி கொடுத்து திரையரங்கு உரிமையை பெற்றுள்ளார். கவின் படத்தில் அதிக விலைக்கு போனது “ஸ்டார்” படம் தான்.

மாநாடு படத்தின் திரையரங்கு உரிமைகளை பெற்ற நிறுவனம் தான் இந்த படத்தின் உரிமைகளையும் பெற்றுள்ளது. ஆனால் அதே மே 10ஆம் தேதி சந்தானம் நடித்து “இங்க நான் தான் கிங்” என்ற படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

சந்தானம் படத்தின் திரையரங்கு உரிமைகளை வாங்கியவர் மதுரை அன்புச்செழியன். இவருக்கு மதுரையில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் அத்துபடி. அதனால் சந்தானம் படத்திற்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் கவினின் ஸ்டார் படம் சிக்கலில் உள்ளது.

கவின் பட உரிமைகளை வாங்கியவர்கள் சந்தானம் படத்தை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்யும்படி கேட்டு வருகின்றனர். அதற்கு அந்த தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்து வருகிறார். இரண்டு படங்களும் மே பத்தாம் தேதி மோதுகிறது.

“ஸ்டார்” மற்றும் “இங்க நான் தான் கிங்” ஆகிய இரண்டு படங்களின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மாநாடு படத்தை தியேட்டரில் வினியோகம் செய்து அதிகம் சம்பாதித்த நிறுவனம் தான் இப்பொழுது கவின் படத்தையும் வாங்கி இருக்கிறது. சந்தானம் படத்தின் மூலம் இப்பொழுது சிக்கல்களை சந்தித்து வருகிறது.

Trending News