புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ஜிவி பிரகாஷ் படத்தில் நடித்தது தப்பு.. புலம்பும் கயல் ஆனந்தி

பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் கயல் ஆனந்தி எப்படி திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதே இன்றுவரை தமிழ் ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் கயல் ஆனந்தி.

கயல் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்தவர் ஆனந்தி. அடிப்படையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமா நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு சண்டி வீரன் பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்து இருந்த நேரத்தில்தான் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் நெருக்கமாக நடித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த பெண்ணா இப்படி என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது அவருடைய சிறப்பான நடிப்பு.

நடிப்பு கூட பரவாயில்லை அவர்கள் பேசும் வசனம் அய்யய்யோ சொல்லவே வேண்டாம். இரட்டை அர்த்தத்தை இரட்டிப்பாக பேசி கேட்பவர்களை நாராசம் செய்து விட்டனர். இப்படிப் அடுத்த படத்தில் கயல் ஆனந்தி நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில் தற்போது அதற்கான விடையை அவரே ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆதிக் ரவிச்சந்திரன் கதை சொல்லும் போது தனக்கு அப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் இல்லை எனவும் ஆனால் படம் எடுக்கப்பட்டது வேறுவிதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் படத்தை விட்டு விலகுவதாக கூறிய உள்ளாராம்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தனக்கு பல கோடி நஷ்டம் ஆகி விடும் எனவும் நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான் எனவும் கெஞ்சியதால் அந்த படத்தில் வேறுவழியின்றி நடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இனிமேல் அப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் கயல் ஆனந்தி.

Trending News