ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

படுமோசமான ரொமான்டிக் காட்சியில் நடித்துள்ள கயல் ஆனந்தி.. வைரலான ஸ்ரீதேவி சோடா சென்டர் ட்ரைலர்

2014 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அதே வருடத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் அவருக்கு கயல் ஆனந்தி என்ற அடைமொழியை கொடுக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பல வாய்ப்புகள் கிடைத்தன.

அதில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், வெற்றிமாறனின் விசாரணை போன்ற படங்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கூட அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

தமிழில் சரியான வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செலுத்தும் கயல் ஆனந்தி நடிப்பில் அடுத்ததாக ஸ்ரீதேவி சென்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கயல் ஆனந்தி தெலுங்கில் இப்படி ஒரு கவர்ச்சி நடிகையா என யோசிக்கும் அளவுக்கு அந்த பட நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். இதனாலேயே அந்த ட்ரெய்லர் ஒரே நாளில் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News