பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆனந்தி. அடுத்ததாக இவர் நடித்த கயல் என்ற படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இவருக்குக் கயல் ஆனந்திஎன ரசிகர்களால் மகுடம் சூட்டப்பட்டது.
அதன்பிறகு இவர் சண்டிவீரன், விசாரணை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஜிவி பிரகாஷுடன் ஜோடியாக நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற தொடர்ந்து ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது இவரது நடிப்பில் அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல் மற்றும் ராவண கூட்டம் போன்ற திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. சமீபகாலமாக கயல் ஆனந்தி திருமணம் பண்ணி கொள்வதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதைப்பற்றி கயல் ஆனந்தி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது கயல் ஆனந்தியின் திருமணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கயல் ஆனந்தி தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டடு நேற்று இரவு மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கயல் ஆனந்தி சினிமாவில் நடிக்க எந்த தடையுமில்லை என அவரது கணவர் சார்பில் இருந்து பச்சை கொடி காட்டி விட்டார்களாம்.