பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கயல் ஆனந்தி. வயது 27 தான் ஆகிறது. இவருக்கு திடீர் திருமணம் என்றதும் ரசிகர்களுக்கு பேச்சு மூச்சு இல்லையாம்.
என்னதான் நயன்தாரா, அனுஷ்கா என ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்தாலும் கயல் ஆனந்தி போன்ற சின்னச்சின்ன நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவதை மறுக்கமுடியாது.
தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்த கயல் ஆனந்தி பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து வெளியான கயல் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து சண்டி வீரன், கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வந்தார். தன்னுடைய சினிமா கேரியரில் அவர் செய்த ஒரே ஒரு தவறு என்றால் அது என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் நடித்தது தான்.
பசங்க படத்தில் பிரபலமடைந்த பையனுடன் ஜோடி போட்டதால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதோடு ஆனந்தியின் மார்க்கெட்டும் சற்று ஆட்டம் கண்டது. அதிலிருந்து சமீபத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் மீண்டு வந்தார். தற்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கும் ஆனந்திக்கு திடீரென திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று இரவு ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசியமாக சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம் கயல் ஆனந்தி. திருமணத்திற்குப் பிறகு பல நடிகைகளின் சினிமா கேரியரை கேள்விக்குறியானது குறிப்பிடத்தக்கது.