சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ராட்சசனை மிஞ்சிய ஓயிட் ரோஸ் ட்ரெய்லர்.. கயல் ஆனந்தியை புரட்டி எடுக்கும் தயாரிப்பாளர்கள்

Kayal Anandhi : சமீபகாலமாக சைக்கோ திரில்லர் படம் அதிகம் தமிழ் சினிமாவில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ஒயிட் ரோஸ் படம்.

அறிமுக இயக்குனர் ராஜசேகரன் இயக்கத்தில் பூம்பாறை முருகன் புரொடக்ஷனில் இந்த படம் உருவாகி இருக்கிறது. கயல் ஆனந்தி கடைசியாக நடித்துள்ள மங்கை படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார்.

இதனால் அந்த படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் ஒயிட் ரோஸ் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்கே சுரேஷ் பண மோசடி வழக்கில் சிக்கினார். அவரது படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் இப்போது தான் வரிசையாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கயல் ஆனந்தியின் ஓயிட் ரோஸ் ட்ரெய்லர்

இவ்வாறு இரண்டு தயாரிப்பாளர்கள் மூலம் கயல் ஆனந்தி படம் தேங்கி கிடந்தது. இந்நிலையில் இப்போது அதற்கு ஈடு செய்யும் விதமாக ராட்சசனை மிஞ்சும் அளவுக்கு ஒயிட் ரோஸ் டீசர் வெளியாகி இருக்கிறது.

அடுத்தடுத்த மர்ம கொலையால் அரண்டு போய் உள்ளார் கயல் ஆனந்தி. இதில் தன்னுடைய மகளும் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார். அந்தக் குழந்தை அவரது ஏரியாவில் உள்ள கொலைகாரனிடம் மாட்டிக் கொண்டுள்ளது.

அந்தத் தொடர் கொலைக்கான காரணம் என்ன, குழந்தையை கயல் ஆனந்தி மீட்டாரா என்பதுதான் ஒயிட் ரோஸ். மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி உள்ளது.

Trending News