திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எழிலின் ஆசையை உடைத்து புது ரூட்டுக்கு போகும் கயல்.. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு எண்டே இல்ல, டம்மியான சிவசங்கரி

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், எழில் ஆசைப்பட்ட மாதிரி கயலுடன் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. ஆனாலும் இவர்களை பிரித்துக் காட்டுவேன் என்று சிவசங்கரி ஒரு பக்கம் சதி வேலைகளை செய்து வருகிறார். ஆனாலும் கயல் குடும்பத்தில் உள்ளவர்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் அதற்குள் எழில், அவருடைய முதல் ராத்திரி பற்றி கனவு கண்டு சந்தோஷத்திற்கு போய்விட்டார். அப்படி ஆசையுடன் போன எழிலுக்கு, கயலின் அப்பா பற்றிய கதையும் இலட்சியத்தையும் பற்றி சொல்லி எழிலின் ஆசையை உடைத்து விட்டார். அதாவது தன் சிறு வயதில் இருக்கும் பொழுது ஆலங்குளத்தில் கம்பீரமாக இருந்த என்னுடைய அப்பா பெயர் ரொம்பவே அடிபட்டுவிட்டது.

எந்த தவறும் பண்ணாத என்னுடைய அப்பா பொய்யான பழியை சுமந்து கொண்டு அந்த ஊரை விட்டு கண்ணீருடன் நெற்கதியாக கிளம்பினார். அந்த ஒரு விஷயம் இப்பொழுதும் என் நெஞ்சுக்குள் குத்திக் கொண்டிருக்கிறது. அதனால் நமக்கு கல்யாணம் முடிந்த கையுடன் என்னுடைய அப்பா ஊருக்கு போயிட்டு கோவிலில் பொங்கல் வைத்து எங்க அப்பா மீது பழி சுமத்திய விஷயங்களை கண்டுபிடித்து எங்க அப்பா எந்த தவறும் பண்ணவில்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார்.

இதை கொஞ்சம் கூட சலிக்காமல் காது கொடுத்து எழில் கேட்டுக் கொண்டு உன்னுடைய அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு நானும் உன்னுடன் பக்கபலமாக இருப்பேன். இதைப் பற்றி நாம் வீட்டில் இருப்பவர்களிடம் பேசி நாம் அந்த ஊருக்கு போகலாம் என்று எழிலும் வாக்கு கொடுக்கிறார். அந்த வகையில் இனி அந்த கிராமத்தில் நடந்த விஷயங்களையும் கயல் அப்பாவுக்கு யார் கெடுதல் செய்தார் என்கிற விஷயத்தையும் கண்டுபிடிக்கும் விதமாக இன்னும் கொஞ்சம் வருஷத்துக்கு புது ட்ராக்ட் ஓடிக்கொண்டு தான் இருக்கப் போகிறது.

அந்த வகையில் கயல் சீரியலுக்கு எண்டே இல்லை என்பதற்கு ஏற்ப அஞ்சு வருஷத்துக்கு நாடகத்தை பிக்ஸ் பண்ணி விட்டார்கள். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றிருப்பதால் தொடர்ந்து இதை தக்க வைத்துக் கொள்வதற்காக வித்தியாசமான கதைகளுடன் கயல் சீரியல் வரப்போகிறது. இதற்கிடையில் கயல் மற்றும் எழிலை பிரிக்க வேண்டும் என்று நினைக்கும் சிவசங்கரி தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

Trending News