Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் மற்றும் எழிலின் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கல்யாண வேலைகள் நடக்கும் என்று எதிர்பார்த்தால் கயல் சம்பந்தமே இல்லாத பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். போதாதருக்கு எழில் அம்மா போட்ட கணக்குப்படி கயல் மாட்டிக் கொண்டு எழிலை விட்டு பிரிய முடிவெடுத்து இருக்கிறார்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நிதானமாக யோசித்து தைரியமாக செயல்படக்கூடிய கயல், எழிலின் ஜாதக விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார். இந்த சூழலில் கயலின் அத்தையாக இருக்கும் ராஜியின் மகன் மனோஜ் செய்த விபத்து காரணமாக ராஜி வீட்டு வாசலில் போய் கயல் நியாயம் கேட்கிறார்.
தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொண்ட கயல் குடும்பம்
கயல் சொன்னபடி மனோஜ் தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்து கொண்ட ராஜி, அந்த வீட்டிற்கு தேவையான அனைத்து செலவுகளையும் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் கயல், மனோஜ் செய்தது தவறு அதற்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். அதனால் நான் போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார்.
அதன்படி போலீஸ், ராஜி வீட்டுக்கு வந்து மனோஜை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள். இதை பார்த்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் கயல் மீது ராஜி உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி பெருசாக்குவது போல் ராஜி இருக்கும் நிலைமையை தெரிந்து கொண்ட பெரியப்பா மற்றும் வடிவு இதெல்லாம் கயல் மற்றும் அவருடைய குடும்பம் சேர்ந்து செய்த சதி.
வேணுமென்றே உன்னை சிக்கலில் சிக்க வைப்பதற்காக அவர்கள் போட்ட பிளான் என்று ராஜி மனதை குழப்பி கயலுக்கு சரியான வில்லி மாதிரி ராஜியை தூண்டி விட்டார். அத்துடன் மனோஜ்க்கு பார்த்து வைத்த பெண் வீட்டார்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று போய்விட்டார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்த ராஜி, கயலை பலி வாங்க வேண்டும் என்றால் ஆனந்தி என்ற துருப்புச் சீட்டு நம்மிடம் இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் என் குடும்பத்தையும் மகனையும் அசிங்கப்படுத்திய கயலுக்கு பாடத்தை கற்பிக்கும் விதமாக ஆனந்தியை இந்த விட்டு மருமகளாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார்.
இதை பெரியப்பாவிடம் சொல்லிய நிலையில், மனோஜ் ஆனந்திக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதை நான் முன்னிருந்து நடத்தி வைக்கிறேன் என்று ராஜிக்கு வாக்கு கொடுக்கிறார். அதன்படி மூர்த்தியிடம், ஆனந்தி படிச்சது போதும் ராஜி மாதிரி ஒரு வசதியான குடும்பத்தில் உன் தங்கச்சி வாக்கப்பட்டால் சந்தோஷமாக இருப்பாள் என்று மூர்த்தி மனதை கலைத்து கயல் வீட்டில் பேச வைக்கிறார்.
ஆக மொத்தத்தில் கயலை அடிமை ஆக்கவும் பழிவாங்கவும் ஆனந்தி மனோஜ்க்கு கல்யாணம் நடத்தி வைக்கலாம் ராஜி, பெரியப்பா போட்ட பிளானில் காமாட்சியும் தலையாட்டப் போகிறார். ஆனால் இவர்கள் நினைப்பது என்னைக்கும் நடக்காது என்று தங்கச்சிக்காக கயல் போராட போகிறார். ஆக மொத்தத்தில் கயலை நினைத்து எழில் கடைசி வரை சன்னியாசியாக புலம்பும் படி அமையப் போகிறது.
கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- சிவசங்கரி மாத்தி வைத்த ஜாதகத்தை கண்டுபிடிக்க போகும் கயல்
- சிவசங்கரிக்கு கயல் கொடுத்த பதிலடி, குழப்பத்தில் எழில்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு