Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாததால் ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்கள் கயலுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி செலிப்ரேஷன் பண்ணுகிறார்கள். அந்த நேரத்தில் கயல், எழிலை விட்டு பிரியப் போவதை நினைத்து வருத்தப்பட்டு தோளிடம் பேசுகிறார். உடனே தோழி சொன்ன விஷயம் கயிலை யோசிக்க வைத்து விட்டது.
அதாவது உன் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று எழிலின் அம்மா சிவசங்கரி பிளான் பண்ணி பல சதிகளை பண்ணுகிறார். அந்த வகையில் ஜாதகத்தை மாற்றி வைத்து நீ எழிலை விட்டு பிரிய வேண்டும் என்பதற்காக ஏன் இதெல்லாம் சிவசங்கரி வேலை ஆக இருக்கக் கூடாது என்று சரியான பாயிண்ட்டை பிடித்து கயலை யோசிக்க வைத்து விட்டார்.
கயலை அடிமையாக்க ராஜி போடும் திட்டம்
தோழி சொன்னதை கேட்டு கயலுக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அதனால் இருவரும் சேர்ந்து ஜோசியக்காரரை சந்தித்து விசாரித்து வருவோம் என்று கிளம்புகிறார்கள். அந்த வகையில் சிவசங்கரி மாற்றி வைத்த ஜாதகத்தை கயல் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒருவேளை இது பொய் என்று தெரிந்த நிலையில் இதற்கு பின்னாடி சிவசங்கரி தான் இருக்கிறார் என்று கயல் புரிந்து கொண்டால் யார் என்ன நினைத்தாலும் எழிலிடமிருந்து கயலை பிரிக்க முடியாது.
இதனைத் தொடர்ந்து கயலின் அத்தை ராஜியின் மகன் செய்த விபத்து காரணமாக ஒருவர் அடிப்பட்டு விடுகிறார். அவரைக் காப்பாற்றும் விதமாக அன்பு, கயலின் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வருகிறார். வந்ததும் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த பிறகு கயலிடம் இதற்கெல்லாம் காரணம் ராஜி அத்தையின் மகன் மனோஜ் செய்த விபத்து தான் என்று சொல்கிறார்.
உடனே கயில் ஆவேசமாக அத்தை வீட்டுக்கு கிளம்பி ராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அத்துடன் மனோஜ் செய்த குற்றத்துக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று கயல் வழக்கம் போல் நீதி நேர்மை நியாயம் என்று வாதாடுகிறார். இதற்கிடையில் பெரியப்பா மற்றும் வடிவு கயல் வீட்டிற்கு போய் ராஜி, மனோஜ்க்கு பொண்ணு பார்த்த விஷயமாக பேசி இருக்கிறார்கள்.
இதில் ஏதாவது பிரச்சனை பண்ணும் விதமாக வடிவு, மனோஜ்க்கு ஏன் காமாட்சியின் மகள் ஆனந்தியை கட்டி வைக்கக் கூடாது என்று கோர்த்து விட்டார். அப்பொழுது ராஜி, என் மகன் மனோஜ்க்கு ஆனந்தி எந்த விதத்தில் செட் ஆகும். என் பையன் ரேஞ்ச் என்ன இவள் ரேஞ்ச் என்ன என்று தகுதியை வைத்து ரொம்பவே அசிங்கப்படுத்தி பேசி இருப்பார்.
இப்பொழுது கயல், மனோஜை அசிங்கப்படுத்திய நிலையில் கயலை பழி வாங்குவதற்காக ஆனந்தியை கட்டி வைக்கலாம் என்று ராஜி முடிவு எடுக்கப் போகிறார். ஏனென்றால் கயல் யாருக்காகவும் எதற்காகவும் அடங்க மாட்டார். அப்படி அடக்க வேண்டும் என்றால் குடும்பத்தை தன் கைவசம் வைத்திருந்தால் மட்டும் தான் முடியும். அதற்கு கயலின் தங்கை எனக்கு மருமகளாக வேண்டும் என்று ராஜி கணக்கு பண்ணுகிறார்.
ஆனால் இவர்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் கயல், ஆனந்தியை டாக்டராக வேண்டும் என்று லட்சியத்துடன் படிக்க வைத்து வருகிறார். அதனால் இவர்களுடன் போராடும் வகையில் இனி அடுத்தடுத்த கதைகள் நகர்ந்து வரும்.
கயல் சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- சிவசங்கரிக்கு கயல் கொடுத்த பதிலடி, குழப்பத்தில் எழில்
- பெரியப்பா செய்யப் போகும் சூழ்ச்சியால் எழிலுடன் நடக்கும் கயல் திருமணம்