வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

எழிலை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொன்ன கயல்.. சிவசங்கரியுடன் சூழ்ச்சி பண்ண போகும் தீபிகா

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் நிச்சயதார்த்தம் முடிந்த கையுடன் எழிலை கல்யாணம் செய்தால் எழில் உயிர்க்கு ஆபத்து என்று ஜாதகப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டார். அதனால் எழிலை விட்டு பிரியலாம் என்று முடிவு எடுத்திருந்தார். அந்த சூழ்நிலையில் சிவசங்கரியின் உண்மையான முகமும் கயலுக்கு தெரிந்ததால் எழிலை நான் விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

அதன்படி தீபிகா உள்ளே நுழைந்து எழிலை கல்யாணம் பண்ணுவதற்கு பல சதிகளை செய்து வந்தார். ஆனால் இதையெல்லாம் பார்த்த கயல், முழுமையாக எழிலை விட்டுக் கொடுக்க முடியாமல் தவித்தார். அப்பொழுது நடந்த போட்டோ சூட் விஷயமும் கயலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் எழிலுடன் நெருக்கமாக இருப்பது போல் தீபிகா போட்டோக்களை எடுத்து கயலை எரிச்சல் படுத்தினார்.

சவாலில் ஜெயிப்பதற்கு போராடப்படும் கயல்

இதனை பார்த்த கயல், தீபிகாவை அடித்துவிட்டார். பிறகு சிவசங்கரி கயலை கூப்பிட்டு திட்டி வார்னிங் கொடுத்தார். அதனால் கயல் ஒரேடியாக எழிலை விட்டு பிரியலாம் என்று முடிவெடுத்து எழிலை தனியாக வரச் சொல்லி நீயும் நானும் சேர முடியாது என்று சொல்லிவிட்டார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத எழில் மாடியில் இருந்து கீழே குதிக்கிறார்.

பிறகு அந்த இடத்தில் வேலை பார்த்த நபர்கள் எழிலை காப்பாற்றி விடுகிறார்கள். உடனே கயல் கோபப்பட்டு எழிலை திட்டுகிறார். அதற்கு எழில் நீ இல்லாத வாழ்க்கை தான் எனக்கு நரகமாக இருக்கும். அதற்கு நான் உயிரோடு இல்லாமல் செத்துப் போவதுதான் மேல் என்று சொல்லிவிட்டார். இதனை கேட்ட கயல், இனி யாருக்காகவும் எதற்காகவும் உன்னை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன், பிரியவும் மாட்டேன் என்று நம்பிக்கை கொடுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கயல் எடுத்த முடிவை உறுதிப்படுத்தும் விதமாக தீபிகா மற்றும் சிவசங்கரியை பார்த்து பேசுகிறார். அப்பொழுது கயல், எழிலுடன் தான் என்னுடைய வாழ்க்கை இருக்கும். எழிலுக்கும் எனக்கும் தான் நிச்சயம் கல்யாணம் நடக்கும். இதுல யார் குறுக்கிட்டாலும் அவர்களை எதிர்த்து நின்று நான் எழிலை கல்யாணம் பண்ணுவேன் என்று சவால் விட்டுவிட்டார்.

அந்த வகையில் பழைய கயல் திரும்பி வந்துவிட்டார் என்று சொல்வதற்கு ஏற்ப கம்பீரமாக கயல் முடிவெடுத்து விட்டார். இனி கயலுக்கு எதிரியாக தீபிகா மாறப் போகிறார். அதனால் சிவசங்கரி உடன் சேர்ந்து தீபிகா, எழில் கயல் கல்யாணத்தை நிறுத்துவதற்காக சூழ்ச்சி பண்ண போகிறார்.

இதையெல்லாம் தாண்டி எப்படியும் காதலித்த எழிலுடன் கயல் ஒன்று சேர்ந்து விடுவார். ஆனால் இந்த ஒரு விஷயம் நடப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கும் அளவிற்கு கயல் ஒவ்வொரு நாளும் போராட போகிறார்.

கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News