வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு மருமகளாக வந்த வாய்ப்பை கைநழுவுவிட்ட கயல் சீரியல் நடிகை.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

Actor Rajini and serial Actress: அதிர்ஷ்ட லக்ஷ்மி கதவை தட்டும் பொழுது அதை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள். அது எதுக்கு பொருந்துதோ இல்லையோ, சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த ஒரு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த வகையில் முன்னாடி எல்லாம் திறமை இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு வாய்ப்பைத் தேடி அலைந்து திரிந்த காலம் இருந்தது.

ஆனால் தற்போது சோசியல் மீடியா கையில் இருப்பதால் அதை வைத்து ஒவ்வொரு திறமைகளையும் வெளிப்படுத்தி வாய்ப்புகளை பெரும் அளவிற்கு சமூகம் வளர்ந்து விட்டது. இந்நிலையில் சீரியலில் நடிக்கும் பலருக்கும் பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதை சரியாக பயன்படுத்தி வாய்ப்புகளை பெற்று சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் சில பேர் ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பை கை நழுவ விட்டு பிறகு புலம்பும் படியும் நிலைமை இருக்கிறது. அப்படித்தான் கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டார் என்றே சொல்லலாம். கல்யாணம் முதல் காதல் வரை என்ற நாடகத்தில் தொடங்கி ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நெகடிவ் கேரக்டர் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானார்.

Also read: முதல்முறையாக 50 கோடி லாபத்தை சுருட்டிய 3 படங்கள்.. ரஜினிக்கு முன் வசூல் மன்னனாக ஜெயித்த விஜய்

அதன் மூலம் தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இதற்கு இடையில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வெள்ளி திரையிலையும் இவருடைய முகத்தை காட்டி வந்தார். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் ஒரு ஆபீஸர் கேரக்டரில் வந்து நடித்திருப்பார்.

அதன் பின்பு கடந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது ரஜினியின் மருமகளாக நடிகை மிர்ணா நடித்திருப்பார். ஆனால் இந்த வாய்ப்பு இவருக்கு முன்னதாக சைத்ரா ரெட்டிக்கு தான் கிடைத்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடந்து உறுதியான நிலையில் கடைசி நிமிடத்தில் ஏதோ காரணத்தினால் இதிலிருந்து சைத்ரா விலகி விட்டார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடித்த மிர்ணா-விற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தற்போது சைத்ரா புலம்பி தவிக்கிறார். ஆனாலும் என்ன பிரயோஜனம், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம், அதை கோட்டை விட்டுவிட்டார். அதே மாதிரி ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா-விற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

Also read: ஸ்டைலே இல்லாமல் ரஜினியின் மறக்க முடியாத 5 படங்கள்.. தம்பி தங்கைக்காக ஓடாய் தேய்ந்த சூப்பர் ஸ்டார்

Trending News