வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சிவசங்கரியின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட கயல்.. மணப்பெண்ணாக தீபிகா, தாலி கட்டும் போது எழில் கொடுக்கும் டுவிஸ்ட்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், எழில் காதலியை கைப்பிடிக்கும் விதமாக நினைத்தபடி கயலை கல்யாணம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிவசங்கரி பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தனக்கு பிடித்த மருமகளாக தீபிகா இருக்கும் பட்சத்தில் இந்த கயல் என் வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு லாயக்கே இல்லை என்று எழிலின் அம்மா சிவசங்கரி பிடிவாதமாக இருக்கிறார்.

அந்த வகையில் கல்யாணம் நடக்கும் பொழுது ஏதாவது ஒரு சதி செய்து எழில், தீபிகா கழுத்தில் தாலி கட்டும் விதமாக தில்லாலங்கடி வேலையை பார்க்க வேண்டும் என்பதற்காக தீபிகாவை மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் தீபிகா செய்த குளறுபடியால் மண்டபத்தை விட்டு வெளியேறும்படி சிவசங்கரி தீபிகா சேர்ந்து நாடகம் நடத்தி விட்டார்கள்.

சிவசங்கரின் ஆட்டத்திற்கு வேட்டு வைக்கும் எழில்

இதனை தொடர்ந்து கயல் ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனாலும் அங்கே சிவசங்கரி பட்ட அவமானத்திற்கும் தீபிகா மருமகளாக வரவேண்டும் என்பதற்காக கயலைக் கடத்த பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் தீபிகா அப்பா அடியாட்களை அனுப்பி கயலை மண்டபத்தில் இருந்து தூக்கி விட்டார்கள். இது எதுவும் தெரியாத பட்சத்தில் தீபிகா மணமேடைக்கு மணப்பெண்ணாக முக்காடு போட்டு வரப் போகிறார்.

முக்காடு போட்டு இருந்தால் எழில், தீபிகா கழுத்தில் தாலி கட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் சிவசங்கரி பிளான் படி பக்காவாக காய் நகர்த்தப் போகிறார். ஆனால் அங்கே தான் எழிலுடைய காதல் நிறைவேறுமா என்பது ஒரு கேள்விக்குறியாக நிற்கப் போகிறது. அதாவது கயலை கடத்திட்டு போய் எங்கேயோ அடைத்து வைத்து விட்டார்கள்.

இது எதுவும் தெரியாத மொத்த குடும்பமும் தீபிகா தான் கயல் என்று நினைத்து மணமேடைக்கு கூட்டிட்டு வரப் போகிறார்கள். ஆனால் தாலி கட்டும் தருணத்தில் எழில் உண்மையை கண்டுபிடித்து சிவசங்கரின் குணத்தையும் கயல் இக்கட்டான சூழலில் இருப்பதையும் தெரிந்து கொள்வார். இதனை அடுத்து எல்லா பிரச்சினையும் சரி செய்து கயல் கழுத்தில் எழில் தாலி கட்டும் தருணம் நெருக்கப் போகிறது.

எவ்வளவு பட்டாலும் திருந்தாத இந்த சிவசங்கரி மகனின் ஆசையையும் கல்யாணத்தையும் நிறைவேற்றாமல் பணத்திமரை காட்டும் விதமாக கயலை நோகடித்து வருகிறார். ஆனால் அம்மாவின் குணம் தெரிந்த எழில், சிவசங்கரியை வெறுக்கும் பட்சத்தில் கயில் உள்ளே புகுந்து நாட்டாமை பண்ணி சிவசங்கரியுடன் எழிலை சமரசம் செய்து விடுவார்.

அதன் பிறகு தான் கயலின் குணத்தை புரிந்து கொண்டு சிவசங்கரி நல்ல மாமியாராக நடந்து கொள்வார். ஆனால் கயல் மற்றும் எழிலின் கல்யாணம் பல வருஷங்களாக இழுத்தாலும் இந்த தேவிக்கு மட்டும் எப்பொழுது குழந்தை பிறக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News