திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி.. மூர்க்கன், தீராக் காதல் வேட்டையாடிய முதல் நாள் கலெக்ஷன்

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை குறிவைத்து படம் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த வருடம் தொடங்கியதிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நிறைய படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினமும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தீராக் காதல் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு போட்டியாக அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படமும் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

கடந்த வாரங்களாக சொதப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யுடன் கூட்டணி போட்டு தனது பெயரை காப்பாற்றிக் கொண்டார். ஒரு காதல் படமாக தீராக் காதல் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அப்படியே நேர் எதிராக சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் கிராமத்து கதையை மையமாக வைத்து கழுவேத்தி மூர்க்கன் படம் எடுக்கப்பட்டது.

மேலும் மூர்க்கனாக அருள்நிதி சண்டைக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருந்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது தான். இந்த படங்களில் முதல் நாள் கலெக்ஷன் விவரத்தை தற்போது பார்க்கலாம். தீராக் காதல் படம் கிட்டதட்ட 50 லட்சம் வசூல் செய்திருந்தது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

ஐஸ்வர்யா ராஜேஷின் முந்தைய பட விமர்சனத்தால் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறைந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் வருவதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பல மடங்கு உயர வாய்ப்பு இருக்கிறது. மேலும் வசூலில் ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளி உள்ளார் அருள்நிதி.

அதாவது கழுவேத்தி மூர்க்கன் படம் கிட்டத்தட்ட 65 லட்சம் வசூல் செய்திருக்கிறது. மேலும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அருள்நிதிக்கு மாஸ் ஓபனிங் கொடுக்கவில்லை என்றாலும், நல்ல பெயரையும் பாராட்டுகளையும் வாங்கி கொடுத்துள்ளது.

Also Read : Kazhuvethi Moorkan Movie Review – அய்யனார் மீசையுடன் மிரட்டும் அருள்நிதி.. கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

Trending News