புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சினிமா வெறுத்துப்போய் விவசாயத்தில் இறங்கிய கீர்த்தி பாண்டியன்.. அப்பாவுடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்

அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் திரையுலகில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது. அதில் யார் மக்களின் மனதில் நிற்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

விளம்பர படங்களை இயக்கிய ஹரிஷ் ராம் இயக்கத்தில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருந்ததா படம் தும்பா. கீர்த்தி பாண்டியன், தீனா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்தஇந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் தன் மகளுக்காக மலையாளத்தில் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வெளியான ஹெலன் படத்தை அன்பிற்கினியாள் என்ற டைட்டில் மூலம் ரிமேக் செய்தனர். அதுவும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அருண்பாண்டியன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவர்களின் சொந்த ஊரான பாளையங்கோட்டை அருகே உள்ள எட்டெரி என்ற கிராமத்தில் உள்ளனர்.

சினிமா வெறுத்துப்போய் கீர்த்தி பாண்டியன் தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் விவசாயத்தைக் கற்றுக் கொள்கிறேன் என்பது போன்ற பதிவை வெளியிட்டுள்ளார்.

keerthi-pandiyan
keerthi-pandiyan

பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் பிரபல தயாரிப்பாளரின் மகள், இப்படி ஒரு முடிவை எடுத்தது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

keerthi-pandiyan-1
keerthi-pandiyan-1

Trending News