வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நாலாபக்கமும் அடிவாங்கும் கீர்த்தி சுரேஷ்.. ஏதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் அம்மணி

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த மிகக்குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட வந்தது.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு மகாநடி எனும் பயோபிக் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இப்படம் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதனால் மீண்டும் தொடர் வெற்றிப் படங்களை கொடுப்பார் என நினைத்த நிலையில் பெண்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி, சாணி காகிதம் என தொடர் தோல்வி படங்களை கொடுத்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடித்தால் கண்டிப்பாக பெரிய ஸ்கோப் இருக்கும் என்று நினைத்த பல வெற்றிப் படங்களை நழுவவிட்டார். ஆனால் அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷிற்கு மோசமான விமர்சனங்களே வாங்கி தந்தது.

இதனால் கீர்த்தி சுரேஷ் மிகுந்த அப்செட்டில் இருந்தார். இதனால் தற்போது எதாக இருந்தாலும் யோசித்துதான் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளாராம். தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதுதவிர நானிக்கு ஜோடியாக தசரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் கண்டிப்பாக அவருக்கு வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் கீர்த்தி சுரேஷ் உள்ளார்.

Trending News