தமிழ் சினிமாவில் கால் பதித்த குறுகிய காலத்திலேயே தாறுமாறான வளர்ச்சியை பெற்றவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன், அண்ணாத்த, சாணி காகிதம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு மட்டுமில்லாமல், நான்கு தெலுங்கு படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறாராம்.
அதேபோல் கீர்த்தி சுரேஷின் இயல்பான நடிப்பிற்கும் அசாதாரணமான முகபாவனைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
அதாவது தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருப்பவர் ஆவார். இதனால் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கீர்த்தி.
மேலும் அந்தப் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வைரல் ஆக்குவது வழக்கம். அந்தவகையில் கீர்த்தி சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் கீர்த்தி சுரேஷ், அவரது பாட்டி, அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.
![keerthy suresh family photo](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/keeer.jpg)
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.