செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மகேஷ்பாபுவின் படத்தில் பிகினி உடையில் கீர்த்தி சுரேஷா? கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!

சினிமாவைப் பொருத்தவரை கிளாமர் காட்டினால் மட்டுமே முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்பது நிதர்சன உண்மையாகும். ஆனால் அதற்கெல்லாம் எதிர்மாறாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவே கண்ணியமாக நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

எனவே கமர்சியல் படங்கள் கை கொடுக்கவில்லை என்று தான் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே படுதோல்வி அடைந்து வருகிறது. இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்த சூழலில் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ், பிகினி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கவிருகிறார் என்ற  தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

keerthi suresh
keerthi suresh

இதனை முற்றிலுமாக மறுத்த கீர்த்தி சுரேஷ், ‘பிகினி, லிப் லாக் போன்ற காட்சிகளில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை ஆணித்தரமாக கடைபிடித்து வருகிறேன்.

ஆகையால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று வதந்தியின் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இருப்பினும் கீர்த்தி சுரேஷின் இந்த முடிவினால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Trending News