வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வில்லங்கமான கதையில் மீண்டும் அப்படி நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. அதெல்லாம் சரி, அந்த ஐட்டம் பாட்டு இருக்கா?

கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக முன்னணி நடிகர்களுடன் கமர்சியல் படங்களில் நடிப்பதை பெரும்பாலும் குறைத்துக்கொண்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் பெரிய அளவில் அது அவருக்கு கைகொடுத்ததாக தெரியவில்லை. இதனால் தமிழிலும் சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் கமர்சியல் படங்களில் களமிறங்க தொடங்கிவிட்டார்.

அந்தவகையில் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபாட்டா என்ற படம் கைவசம் உள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சில சோலோ ஹீரோயின் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை கையில் எடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

கடந்த ஜூலை 26ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியான திரைப்படம் மிமி. பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதையே, சினிமா கனவில் இருக்கும் பெண்ணொருவர் பணத்திற்காக வாடகைத் தாயாக மாறி அதனால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான்.

இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறுகின்றனர். சம்பளம் மட்டும் ஓகே என்றால் கீர்த்தி சுரேஷ் அதில் நடிப்பது உறுதி. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பெண் குயின் என்ற படத்தில் கர்ப்பிணியாக நடித்திருந்தார்.

மிமி படத்தை விட இந்த படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி என்ற ஐட்டம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சில வாரங்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் குவித்தது. இந்த பாடல் தான் அந்த படத்திற்கு பலம் எனவும் கூறுகின்றனர். அதே மாதிரியான பாடல் தமிழில் எடுக்கப்பட்டால் கீர்த்தி சுரேஷ் அந்த மாதிரி உடை அணிந்து ஆடுவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வி. இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

keerthi-suresh-mimi-remake
keerthi-suresh-mimi-remake

Trending News