மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி பட்ஜெட்டில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மரைக்காயர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மரைக்காயர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
கேரளா சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இதுதான் என்கிறார்கள். சமீபத்தில்கூட மரைக்காயர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மார்ச் மாதம் 26ஆம் தேதி மரைக்காயர் படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக போஸ்டருடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மற்ற மொழிகளிலும் மரைக்காயர் படம் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தமிழில் அந்த படத்திற்கு மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பழங்கால பெண் வேடத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான முதல் மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.