புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமா காட்டுறீங்க.. கவர்ச்சிக்கு புதிய தத்துவம் கூறிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த அளவிற்கு கீர்த்தி சுரேஷ் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இப்படத்தில் ஒரு சில காட்சிகள் கீர்த்தி சுரேஷ் ஓவராக நடித்து இருந்ததாகவும் ஒரு சிலர் விமர்சனம் வைத்தனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். அதற்கு அப்படியே எதிர்மாறாக சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார். அதுவும் கீர்த்தி சுரேஷின் அதிக கவர்ச்சியும் கிளாமரான குத்தாட்டமும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் கூட கீர்த்தி சுரேஷ் பயங்கரமான கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதனால் பலரும் கீர்த்தி சுரேஷ் இனிமேல் அதிக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பார் எனக் கூறி வந்தனர். அதற்கு கீர்த்தி சுரேஷ் கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு நான் ஒருபோதும் மறுப்பதில்லை.

அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அதனை கவர்ச்சி என்று நாம் அனைவரும் மிகைப்படுத்தி விட்டோம், கிளாமரில் நடிப்பேன் என்பதற்காக ஆடைகளைக் குறைத்து நடிப்பேன் என கூறவில்லை ஆடையுடன் கிளாமரை வெளிப்படுத்துவது தான் என்னுடைய கருத்து என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ஆனால் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் அதிகமான கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.

கதாநாயகிகளை பொருத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது அதிகமான படங்களில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் நடித்துவிட வேண்டும் கொஞ்சம் ரசிகர்களிடமிருந்து வரவேற்பு குறைய தொடங்கி விட்டால் நடிகைகளுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது. சர்க்காரு வாரி பாட்டா பட ஆடியோ வெளியிட்டு விழாவில் ட்ரான்ஸ்பரன்ட் கவர்ச்சி  புடவையில் வந்து ரசிகர்களைகுஷிப்படுத்தினார்.

keerthy-suresh
keerthy-suresh

அதற்காகவே பல நடிகைகள் கவர்ச்சி களத்தில் குதித்து விடுவார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் கிளாமர் காட்சிகளில் நடிக்கும்போது ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடம் கிடைக்கும் என்பதற்காகவே பல நடிகைகள் கிளாமர் காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்கின்றனர்.

Trending News