திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எவன்டா கிளப்பி விட்டது? கடும் கோபத்தில் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். படத்துக்கு படம் இவரது மார்க்கெட் கூடிக்கொண்டே செல்கிறது. இருந்தாலும் முன்னர் போல் கைவசம் அதிக படங்கள் இல்லை என்ற பேச்சுக்களை சினிமா வட்டாரங்களில் அதிகம் காணப்படுகிறது.

அதற்கு காரணம் என்ன என்பதை சொல்லாமல் இருந்தாலும் கீர்த்தி சுரேஸ் உடல் எடையை குறைப்பதுதான் என நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர். கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் அதிகம் ரசிக்க காரணம் அவருடைய கொழுகொழுப்பான உடலமைப்பு தான் எனவும் அது இப்போது இல்லை என்பதால் அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை எனவும் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் தளபதி அறுபத்தி ஆறு படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்தான் என வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது கூட கீர்த்தி சுரேஷ் நான் இன்னும் அந்த படத்தில் ஒப்பந்தம் ஆகவில்லை என ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார்.

இருந்தாலும் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்தான் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் என சினிமா வட்டாரங்களில் கிளம்பி விட்டால் வேறு ஏதேனும் நடிகைகள் போட்டிக்கு வந்து விடுவார்கள் என பயந்து அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்ததாகவும் இது வெளியில் வந்ததால் ஒருவேளை இதுவே தனக்கு நெகட்டிவாக மாறி விடுமோ என்ற பயத்திலும் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

மேலும் யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த விஷயம் எப்படி வெளியேறியது என தன்னுடைய நட்பு வட்டாரங்களில் கடிந்து கொண்டாராம். இதனால் தற்போது தளபதி அறுபத்தி ஆறு பட வாய்ப்பு தனக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்திலும் இருப்பதாக கூறுகின்றனர்.

Trending News