திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

படுப்பதற்கு முன் இதை செய்யுங்கள் மகேஷ் பாபு.. அன்பு கட்டளையிட்ட கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது கீர்த்திசுரேஸ் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் சாணி காகிதம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் கீர்த்தி சுரேஷ்நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். நேற்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் எனும் பர்த்டே பிளாஸ்டர் எனும் டீசரை வெளியிட்டு இருந்தது.

இந்த டீசர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கீர்த்தி சுரேஷ் அந்த டீசரை பதிவிட்டு மகேஷ்பாபு இருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இதற்கு மகேஷ் பாபு நன்றி காலாவதி என கூறியிருந்தார். இதைப் பார்க்கும்போது கீர்த்திசுரேஷ் இப்படத்தில் காலாவதி எனும் கதாபாத்திரம் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

keerthy suresh mahesh babu
keerthy suresh mahesh babu

கீர்த்தி சுரேஷ் மகேஷ்பாபுவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நர்மதா மேம் சார் படுக்கச் செல்வதற்கு முன்பு தினமும் அவருக்கு திருஷ்டி சுத்தி போடுமாறு கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு மகேஷ்பாபு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News