ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இருக்குற இடத்துக்கு ஏத்த மாறி பச்சோந்தியா மாறிக்கணும்.. திருப்பதியில் சர்ச்சையை கிளப்பிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பின்னர் கோலிவுட்டில் இவர் முன்னணி ஹீரோயினாக மாறினார். குறுகிய காலத்திலேயே தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

எந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் மாறினாரோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக ட்ரோல்களையும் இவர் சந்தித்தார். ஆனால் அத்தனை நெகட்டிவிட்டிக்கும் பதில் சொல்லும் அளவுக்கு இவர் நடித்த மகாநடி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, கீர்த்திக்கு தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது.

Also Read:இளம் நடிகருடன் படுக்கையில் கட்டி உருளும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்

கிடைத்த புகழை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு ஏனோதானோ என்று கதைகளை தேர்வு செய்யாமல், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்தார். இதனால் இவர் தமிழில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் விரைவாக குறைந்தது. மேலும் உடல் எடையை குறைத்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு பட வாய்ப்புகள் மொத்தமாக போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நானியுடன் இவர் நடித்த தசரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு கீர்த்தி சுரேஷ் நடிப்பின் மீது ரசிகர்களின் கவனமும் திரும்பியது. கீர்த்தி அடுத்தடுத்து ரகுதாத்தா, போலோ சங்கர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாகவே நடிகைகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது இவர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Also Read:சிவராத்திரி அன்று ரசிகர்களுக்கு காட்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

திருப்பதி கோவிலுக்கு வேண்டுதலுக்காக சென்றிருந்த கீர்த்தி சுரேஷ் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். முழுக்க முழுக்க தெலுங்கில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் நிருபர் ஒருவர் தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு நான் திருப்பதியில் இருக்கிறேன் என்று ரொம்பவும் நக்கலாக பதில் சொல்லி சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் இவர்.

இவர்களைப் போன்ற ஒரு சில நடிகர், நடிகைகள் தங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை எளிதாக மாற்றிக் கொள்கிறார்கள். எந்தெந்த மொழிகளில் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அந்த ரசிகர்களை கவரும் வகையில் மேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பேசுகிறார்கள். இப்போது திருப்பதியில் இருப்பதால் தமிழில் பேச முடியாது என்று சொன்ன கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தின் பிரமோஷனுக்காக எப்படி எல்லாம் பேசுவார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also Read:டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

Trending News