மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இருப்பினும் இரண்டாவதாக வெளியான ரஜினி முருகன் படம் மூலமாகவே பிரபலமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மகாநடி, சீமராஜா, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றார். இப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கீர்த்தி சுரேஷிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் செல்வராகவனுடன் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது வரை படங்களில் கிளாமருக்கு நோ சொல்லி வரும் கீர்த்தி சுரேஷ், அடிக்கடி தந்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அதில், தனது செல்ல நாய் குட்டி அம்பயராக நிற்க, மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ், ஒரே பாலில் ஸ்டெம்ப்களை க்ளீன் போல்ட் செய்துள்ளார்.
இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. புதிய படத்திற்காக பயிற்சி எடுக்கிறீர்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.