ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அனிருத், கீர்த்தி சுரேஷ் காதல் விவகாரம்.. கண்டபடி திட்டி முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் சமீபகாலமாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் குடும்பமே செம கடுப்பில் இருக்கிறதாம்.

நல்ல இசையமைப்பாளர் என்ற பெயரை அனிருத் எடுத்திருந்தாலும் பெண்கள் மற்றும் நடிகைகள் விஷயத்தில் அவருக்கு கொஞ்சம் நெகட்டிவ் இமேஜ் இருக்கிறது. ஆரம்பத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல் சர்ச்சை நடந்தது.

அதன் பிறகு பீப் பாடல் பிரச்சனையில் மொத்த பெண்களும் அனிருத்துக்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தன்னுடைய கேரியரில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாகவும் புரளி கிளம்பியது. அதற்கு காரணம் சமீபத்தில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என்கிறார்கள்.

ஏற்கனவே இரண்டு முறை அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள் என செய்தி பரவியதை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டுத்தீ போல் பரவியதால் கீர்த்தி சுரேஷின் தந்தை டென்சனாகி விட்டாராம்.

இப்படியே விட்டால் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் என, தானே முன்வந்து, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவருக்கும் காதல் இல்லை எனவும், வேண்டுமென்றே இது போன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியதை பார்த்தால் அனிருத் தவிர வேறு யாரைவேண்டுமானாலும் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் ஓகே சொல்லி இருப்பார் போல. அப்படி நம்ம ஆளு என்ன பண்ணாரு?

Trending News