திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

இதனால தான் லட்சுமி மேனன் பீல்ட் அவுட் ஆனாங்க.. எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல் ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ்

எண்டோமென்ட் என்பது பொதுவாக யாரையும் விட்டுவைப்பதில்லை இதில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.? திரைத்துறையில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பது உண்டு. நடிகர் நடிகைகளில் இருந்து எந்த ஊரில் முதலில் படப்பிடிப்பு வைத்தால் படம் நன்றாக ஓடும் என்று ஒவ்வொன்றிற்கும் சென்டிமென்ட் பார்ப்பது வழக்கம்.

அதேபோல தற்போது ஒரு நடிகையை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று அவரது நண்பர்கள் சென்டிமென்டாக அவருக்கு அறிவுரை கூறி இருக்கிறார்கள். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் தான் “வேதாளம்”. இதில் லட்சுமிமேனன் தங்கையாக நடித்திருந்தார்.

இப்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது இதில் ஹீரோவாக சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி “ஆச்சாரியா” என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக வேதாளம் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

keerthy-suresh
keerthy-suresh

இந்நிலையில் கீர்த்தி நண்பர்களும் திரைப்படத்தில் லட்சுமிமேனன் தங்கையாக நடித்ததில் இருந்து அதிகமான பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. அதனால் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் கீர்த்தி கண்டு கொள்வதாக இல்லை. நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

Trending News