திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கல்யாணம் ஆகுற நேரத்தில் தரைமட்டத்துக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. Kerchief உடையில் அசத்தல் ஆட்டம்

அட்லீ இயக்கத்தில் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வருண் தவானும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலமாக தான் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பொதுவாகவே பாலிவுட் படங்களில் நடிக்க ஒரு சில ரூல்ஸ் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒன்று லிப்லாக் சீன்.. மற்றொன்று கிளாமர். இந்த இரு விஷயத்திற்கு கன்வின்ஸ் ஆனால் மட்டுமே நடிகைகளுக்கு பெரும்பாலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கிறது. இந்த நிலையில், முதலில் லிப்லாக் சீனில் நடிக்க ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமரின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

பேபி ஜான் படத்தின் first சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் மனம் சில்லு சில்லாக உடைந்துவிட்டது என்றே கூறலாம். ஏன் என்றால் இங்கு மிகவும் ஹோம்லியாக நடித்த கீர்த்தி சுரேஷ், அப்படியே ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இங்கு விஜயுடன் நடிக்கும்போது கூட ஹோம்லியாக தான் நடித்திருந்தார்.

கல்யாணம் ஆகுற நேரத்துல இதெல்லாம் தேவையா?

இப்போது என்னவென்றால் வருண் தவானுடன் கிளாமர் உடையில் அப்படி ஆட்டம் போடுகிறாரே என்று நெட்டிசென்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே பாலிவுட் சென்றதில் இருந்து அசத்தலான போட்டோஷூட்-களை வெளியிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு இப்படி ஷாக் கொடுத்துள்ளார்.

தற்போது தமிழ் ரசிகர்கள், “என்னமா இது.. டிரஸ் kerchief மாதிரி இருக்கு..” என்று விமர்சித்து வருகிறார்கள். மேலும் சாய் பல்லவியுடன் ஒப்பிட்டும் வருகிறார்கள். சாய் பல்லவி, வாய்ப்புக்காக ஆரம்பத்திலிருந்து தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியதே இல்லை. அவருக்கும் தான் ரன்பீர் கபூர் போல பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. இது தான் உண்மையான வெற்றி.. அவர் தான் சிறந்த ஐகான் என்று புகழாரம் செய்து வருகிறார்கள்.

Trending News