வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வத்தலும் தொத்தாலுமாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. எலும்பும் தோலுமாக வைரலாகும் புகைப்படம்

ஒரு காலத்தில் கீர்த்தி சுரேஷ் என்றால் ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு இருக்கும். அதுவும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்ததால் வந்த ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகையாக உயர்த்திவிட்டு அழகு பார்த்தனர்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்று தெரியவில்லை. யோகாசனம் ஜம்மென்று சென்று உடலை குறித்த தன்னுடைய பிளஸ் கொலுக்கு முழுக்கு தேகம் தான் என்பதை மறந்து கேரியரை கெடுத்துக் கொண்டார்.

தற்போது கீர்த்தி சுரேஷுக்கு பெரும்பாலும் படவாய்ப்புகள் இல்லை என்பது அனைவருக்குமே வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில படங்கள்தான் அம்மணிக்கு கைவசம் உள்ளது.

அதுவும் தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகளே கிடையாது. கீர்த்தி சுரேசும் தமிழ் சினிமாவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க குட்டி கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எதுவுமே வேலைக்கு ஆவது போல் தெரியவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய உடல் எடையை கொஞ்சம் அதிகப் படுத்தலாமா என யோசித்து வருகிறாராம். அதேசமயம் தன்னுடன் நடித்த இளம் நடிகர்களுக்கு தூதுவிடும் பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

இந்நிலையில் சமீபத்தில் கோயில் சென்ற புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். வழக்கம்போல் லைக்குகள் குவிந்தாலும் ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் இழைத்து கொண்டே போவது கொஞ்சம் வருத்தம் தான்.

keerthy-suresh-1
keerthy-suresh-1

Trending News