வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாரு? கல்யாணம் எங்க, எப்பொழுது

2000மாவது ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கால் பதித்தவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் 2015 ஆம் ஆண்டு “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான். சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், விஜய் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் கொடி கட்டி பறந்தார்.

கீர்த்தி சுரேஷ் அனைத்து மொழிகளிலும் சேர்த்து இதுவரை 37 படங்களில் நடித்துள்ளார், இதில் தமிழில் மட்டும் 18 படங்கள் அடங்கும். ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்கள் இப்பொழுது இவர் நடிப்பில் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் தமிழில் நடித்து வெளிவந்த படம் ரகு தாத்தா.

ஏற்கனவே தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் கீர்த்தி சுரேஷ் ஆனால் அப்பொழுதே அதற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ், தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்பொழுது அவருக்கு 32 வயதாகிறது . தமிழ் சினிமாவில் ஹீரோயினாக 9 வருடங்கள் வலம் வந்துவிட்டார். இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளுமாறு வீட்டில் பெரியவர்கள் கட்டளை போட்டு விட்டனராம் . கீர்த்தி சுரேஷ் 4 வருடங்களாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காதலித்து வருகிறார், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். 50 முதல் 70 பேருக்கு மட்டும் ரகசியமாய் அழைப்பு சென்று இருக்கிறது. திருமணத்திற்கு பின் வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் கூறி வருகிறார்.

Trending News