தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த பல படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்தாண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் ரஜினிக்காக வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
அண்ணாத்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்பதால் பல படங்களை உதறித் தள்ளியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தை கீர்த்தி சுரேஷ் தவறவிட்டு உள்ளார். இப்படத்தில் நானி மற்றும் சாய்பல்லவி நடித்திருந்தார்கள். முதலில் சாய்பல்லவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது.
இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக இந்த இரண்டு படங்களையும் கீர்த்தி சுரேஷ் தவறவிட்டு விட்டார். அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த இரண்டு பிரமாண்ட படங்களை நழுவ விட்டதால் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.