பரிதவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. 29 வயது தேசியவிருது நடிகைக்கு இப்பவே இந்த நிலைமையா!

தமிழில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

இதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ், அடுத்தடுத்து நடித்த பல திரைப்படங்களும் தோல்வி அடைந்தது.

இதனிடையே சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த நிலையில் பெருமளவில் இவரது நடிப்பு பேசப்படவில்லை. இதனிடையே தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல வருடங்களாக பெரிதும் பேசப்படாத திரைப்படங்களில் நடித்த இவர், எப்படியாவது ஹிட் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக சரியாக சாப்பிடாமல்,டயட் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறி விட்டார்.

இதுவே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கிலும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் சர்க்காரு வாரி பட்ட படத்தில் நடித்த நிலையில் இத்திரைப்படதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெருமளவில் பேசப்படாமல் இருந்தது. இதனிடையே தெலுங்கில் நடிகர்களான நானி, சிரஞ்சீவி உள்ளிட்டோரின் அடுத்தப்படுத்த திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இத்திரைப்படங்களின் வெற்றியின் மூலமாகவே தெலுங்கு திரையுலகிலும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சில வருடங்களில் கீர்த்தி சுரேஷ் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையாக இடம் பிடித்த நிலையில், சில காலமாக வெளிவந்த அவரது திரைப்படங்கள் யாவும் பெரும் தோல்வியை பெற்று வருவதால் இனி கீர்த்தி சுரேஷிற்கு மாமன்னன் திரைப்படம் தான் கடைசி வாய்ப்பாக உள்ளது.