keerthy Suresh: ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவர் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து இருக்கிறார். என்னதான் இவர் ஒரு வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட, அது எதுவும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
இவர் தளபதி விஜய்யுடன் நடித்த சர்க்கார் படத்தில் நடித்த பின்பு, பெரிதாக நினைத்த அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியாக அமையவில்லை. திரைப்படங்கள் வாய்ப்பும் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் மார்க்கெட் அப்படியே குறைந்துவிட்டது. அதனாலேயே இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடிக்க தொடங்கினார்.
இவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணமே, உடல் எடை குறைப்பு தான். எப்படியாவது விட்ட தமிழ் சினிமா மார்க்கெட் பிடிக்கணும் நெனச்சிருப்பாங்க போல கீர்த்தி சுரேஷ். அது மேல இருக்க கடவுளுக்கு கேட்டுச்சா என்னன்னு தெரியல, அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்று சொல்லுவது போல, தற்பொழுது கீர்த்தி சுரேஷ் கையில் வரிசையாக 7 தமிழ் படங்கள் வந்து குவிந்து இருக்கிறது.
இவங்க பிற மொழியில் நடித்த திரைப்படங்கள் கூட, இவருக்கு என தனி அடையாளம் உருவாக்கும் வகையில் அமையவில்லை. எல்லாமே தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து மறுபடியும் தமிழுக்கே என்ட்ரி கொடுத்துட்டாங்க. திண்ணையில கெடந்தவனுக்கு பொசுக்குனு வந்துச்சாம் யோகம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு இவங்களோட கதை. தற்போது அந்த 7 படங்களில் இருந்து 4 படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று விட்டது என்றால் இவர் நினைத்தது போல விட்ட தமிழ் சினிமா மார்க்கெட்டை மீண்டும் நிலை நிறுத்தி விடுவார். அதனைத் தொடர்ந்து எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளும் இவரை வந்து சேரும். ஒரு வேளை நடக்கவில்லை என்றால் எல்லாமே உல்டாவாகிடும்.
சரி கீர்த்தி சுரேஷுக்கு அப்படி என்ன என்ன திரைப்படங்கள்தான் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “சைரன்”, திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க உள்ளார். பிறகு “கன்னிவெடி”, “ரிவால்வர் ரீட்டா”, “ரகு தாத்தா” ஆகிய மூன்று திரைப்படமும் உமன் சென்ட்ரிக் திரைப்படமாகும்.
Also Read:70களிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் 5 ஜென்டில்மேன்ஸ்.. கண்ணியம் தவறாத ரஜினியின்நண்பர்