வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

Keerthi Suresh Lose Weight Secret: கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்த ரகசியத்தை பகிரங்கமாக போட்டு உடைத்து இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் போலவே பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்த இளசுகளின் மனதைக் கவர்ந்த அனுஷ்காவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் வித்தியாசமாக தன்னை காட்ட வேண்டும் என உடல் எடையை பல மடங்கு ஏற்றி புது முயற்சியை மேற்கொண்டார்.

Also Read: விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

அந்தப் படத்திற்குப் பிறகு அனுஷ்காவிற்கு சுத்தமாகவே மார்க்கெட் இல்லாமல் போனது. அதுமட்டுமல்ல அவரது உடல் எடையை மீண்டும் பழையபடி கொண்டு வருவதற்கு படாத பாடுபட்டார். இதே போலவே கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை தட்டி தூக்கிய மகாநதி படத்தில் தன்னுடைய உடல் எடையை ஏற்றினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.

அதுவரை எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளாத கீர்த்தி சுரேஷ், ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். ஆனால் இவர் அனுஷ்கா போலவே தனது கேரியரை தொலைத்து விடாமல் சுதாரித்துக் கொண்டு மளமளவென ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உடல் எடையை குறைத்தார்.

Also Read: Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இவர் ஆப்ரேஷன் செய்துதான் ஸ்லிம்மானதாக பலரும் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஒன்பது மாத கடின உடற்பயிற்சியின் மூலமாகத்தான் உடல் எடையை குறைத்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல நாளடைவில் உடல் எடையை ரொம்பவே குறைத்துவிட்டதால் பல்லி போலவே மாறியதாக விமர்சிக்கப்பட்டார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் எக்ஸர்சைஸ் செய்வதை நிறுத்திவிட்டு யோகா செய்து மீண்டும் தன்னுடைய எடையை கொஞ்சம் ஏற்றினாராம். இப்படி தான் மகாநதி படத்திற்குப் பிறகு மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்ததாக கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read: அனிருத்தை டேட்டிங் செய்து விட்டு கழட்டிவிட்ட 5 நடிகைகள்.. மார்க்கெட்டை சோலி முடிக்க லீக்கான புகைப்படம்

Trending News