தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். தனக்கு எதற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்பதையே மறந்து விட்டார். மலையாள வரவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
எப்போதுமே நம் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் கொழுக் மொழுக் தேகத்துடன் அழகாக இருந்தால் மிகவும் பிடிக்கும். அப்படி ஆரம்பகால படங்களிலேயே அபரிதமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் கீர்த்தி சுரேஷ்.
யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. 27 வயதிலேயே பார்ப்பதற்கு ஆண்ட்டியாக தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் தமிழக ரசிகர்களின் ஆதரவை இழந்து விட்டார்.
அதன் விளைவு தற்போது தமிழில் பெரிய அளவு படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுதான் பட வாய்ப்புகள் இருந்து வருகிறது. ஹீரோயின்களை ரசிப்பதில் தமிழ் தெலுங்கு ரசிகர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் நடிப்பு ரீதியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறாராம்.
சமீபத்தில்கூட சாணி காகிதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். புகைப்படமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி விட்டது.